மட்டக்களப்பு காந்தி பூங்கா புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிப்பு (Photos)
இலங்கை விமானப்படையின் வனிதா சேவை பிரிவின் அனுசரணையில் குவன் மிதுதம் திட்டத்தின் ஊடாக முன்னெடுத்து வரும் சமூக அபிவிருத்தி திட்டங்களின் ஒரு அங்கமாக மட்டக்களப்பு காந்தி பூங்கா புனரமைக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
மட்டு. விமானப்படை வனிதா சேவை பிரிவு அதிகாரிகளின் பங்களிப்புடன் ஒரு மாத காலம் மீள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு, அழகுபடுத்தப்பட்ட காந்தி பூங்கா இன்றைய தினம் மக்கள் பாவனைக்காக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனிடம் (Thiyagaraja Saravanapavan) கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படையின் மட்டு. விமானப்படை பிரிவு குழு தலைவர் ஜி.பி.என்.சி.பியசேன தலைமையில் நடைபெற்ற பூங்கா கையளிக்கும் நிகழ்வில் அதிதிகளாக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாவட்ட அசரங்க அதிபர் கே.கருணாகரன், மாநகர சபை ஆணையாளர் எம்.தயாபரன், வலயக்கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் உட்பட விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கை விமானப்படையின் வனிதா சேவை பிரிவின் அனுசரணையில் குவன் மிதுதம் திட்டத்தின் ஊடாக அழகுபடுத்தப்பட்ட மட்டு. நகர் காந்தி பூங்காவிற்கான நினைவு சின்னம் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கான நினைவு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.









