பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும்: மக்கள் ஆர்ப்பாட்டம்
மாணவர் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம் எனக் கோரி திருகோணமலையில் இன்று (21) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கி ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை 03 கட்டை சர்வோதய வளாகத்துக்கு முன்னால் இடம் பெற்றுள்ளது.
“அனைத்து அறவழி போராட்டக்காரர்களையும் உடன் விடுதலை செய்க!, மாணவர் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம்! மற்றும் விடுதலை செய் விடுதலை செய் மாணவர்களை விடுதலை செய்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கோசமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் பகிரங்க கோரிக்கைகள்
இதனையடுத்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றினையும் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைய அக்கடிதத்தில் குறிப்பிடுவதாவது, “இலங்கையின் வடக்கு, கிழக்கைச் சார்ந்த மனித உரிமை பாதுகாவலர்கள் சிவில் அமைப்புகள் பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியான தங்களிடம் கடந்த 18 ஆவணி 2022 இரண்டாம் திகதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மாணவ செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் சார்ந்த எமது பகிரங்க கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் ஆகியன அரசியலமைப்பின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளாகும்.
இந்த உரிமைகளை பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்களும் தமது கோரிக்கைகளை தமது நாட்டின் சக பிரஜைகளுக்கும் அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தினர்.
பயங்கரவாத நடவடிக்கைகள்
அவர்கள் வன்முறையில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தொழிற்சங்க நடவடிக்கைகளும் வெகுஜன போராட்டங்களும் பயங்கரவாத நடவடிக்கைகள் அல்ல மாணவ செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட எவ்வித நடவடிக்கைகளும் ஈடுபடவில்லை.
எனவே பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம் என கோறுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் சிவில்
அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
