சிட்னி தேவாலய கத்திக்குத்து சம்பவம் : பாதிரியாரின் நெகிழ வைத்த முடிவு
தம்மை கத்தியால் குத்தியவரை மன்னிப்பதாக தாக்குதலுக்குள்ளான அவுஸ்திரேலியா (Australia) - சிட்னி (Sydney) தேவாலய பாதிரியார் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை சிட்னி தேவாலயமொன்றின் ஆராதனை நேரத்தில் நபர் ஒருவர் திடீரென முன்னோக்கி சென்று பாதிரியாரை பல தடவை கத்தியால் தாக்கினார்.
இச்சம்பவம் தொடர்பில், 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அவரை மன்னிப்பதாக தாக்கப்பட்ட பாதிரியார் கூறியுள்ளார்.
சிறுவனின் காணொளி
அவர் மேலும், "இந்தச் செயலைச் செய்தவர் யாராக இருந்தாலும், அவரை மன்னிக்கின்றேன். நான் உங்களுக்காக எப்பொழுதும் ஜெபிப்பேன்.
இதைச் செய்ய உங்களை அனுப்பியவர் யாராக இருந்தாலும், அவர்களையும் இயேசுவின் வல்லமையான நாமத்தில் மன்னிக்கிறேன்.
அது மாத்திரமன்றி, தற்போது சமூகம் அமைதியாக இருக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபர் அரபு மொழியில் சத்தமிடுவது மற்றும் "நபி" என கூறும் காணொளிகள் குறித்து அவுஸ்திரேலியா பாதுகாப்பு புலனாய்வு பிரிவினர் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சம்பவத்துடன் தொடர்புற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மற்றுமொரு 19 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |