சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம்: 16 வயது சிறுவன் கைது
அவுஸ்திரேலியா (Australia) - சிட்னி (Sydney) தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் அசிரியன் கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் ( Assyrian Christ The Good Shepherd) தேவாலயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை நபர் ஒருவர் திடீரென முன்னோக்கி சென்று மதகுருவை பல தடவை கத்தியால் குத்தியுள்ளார்.
இதன்போது, நான்கு பேர் காயமடைந்துள்ளதுடன் தாக்குதல் நடத்தியவரும் காயமடைந்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் விசாரணை
மேலும், இந்த தாக்குதலானது மத ரீதியிலான தீவிரவாதத்தினை தூண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, தாக்குதல் நடத்தியவருக்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan