சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்த வன்முறை! இலங்கையர் ஒருவர் பலி
சுவிட்சர்லாந்து நாட்டின் சென் காலன் மாநிலத்தில் அதிகாலை இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில், இலங்கையைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,
40 வயது இத்தாலிய நபர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அவசர அழைப்பு
இன்று( 10) அதிகாலை 12:45 மணியளவில், இந்தச் சம்பவம், இடம்பெற்றுள்ளது.
மோதல் நடப்பதாக சென் காலன் பொலிஸ் அவசர அழைப்பு மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்திற்கு மூன்றாம் தரப்பினரிடமிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து, சிறிது நேரத்தில் பொலிஸ் ரோந்துப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது, வெட்டுக்களுக்குள்ளாகி, படுகாயமடைந்த இரண்டு பேரைக் கண்டுள்ளனர்.
இலங்கை நபர்
அவர்களில் இலங்கையைச் சேர்ந்த 54 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
40 வயது இத்தாலிய நபர் பலத்த காயங்களுடன் நோயாளர்காவு மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இருவரும் சென் காலன் கன்டோனில் வசிக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 12 மணி நேரம் முன்

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
