விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாய்
மினுவாங்கொடைப் பிரதேசத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை, உருநாறுவ சந்தியில் இன்று(9) காலை குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது குறித்த இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடைப் பிரதேசத்தில் பிரபல போதைப் பொருள் வர்த்தகரான வருண என்பவரிடம் குறித்த இராணுவச் சிப்பாய் ஒப்பந்த அடிப்படையில் போதைப் பொருள் கடத்துவதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இராணுவச்சிப்பாய் ஒரு கிலோ 66 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 300 கிராம் ஐஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இராணுவச் சிப்பாய் சுமார் 16 வருடங்கள் இராணுவத்தில் சேவையாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக அவர் மினுவாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.




