இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய சந்தேகநபர்கள்
புளியம்பொக்கனை பகுதியில் பேருந்தில் கசிப்பினை கொண்டு செல்ல முற்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியினை கட்டுப்படுத்தும் 24 மணிநேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கசிப்பு
இதன்போது தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று மாலை குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 30 லீட்டர் கசிப்பினை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
அத்துடன் இன்றைய தினமும் தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக பெரியகுளம், கட்டைக்காட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் 50 லீட்டர் கசிப்பு, 60 லீட்டர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பிணையில் விடுவிப்பு
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் விசாரணைகளின் பின் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
