ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவின் குரில் தீவுகள் பிராந்தியத்தில் இன்று(9) 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நிலநடுக்கம் குறித்த விவரங்களை NCS, X இல் பதிவில் வெளியிட்டுள்ளது.
EQ of M: 6.1, On: 09/08/2025 19:33:54 IST, Lat: 49.94 N, Long: 162.70 E, Depth: 10 Km, Location: Kuril Islands.
— National Center for Seismology (@NCS_Earthquake) August 9, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/Tt0OXGzPRL
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கடற்கரையோரங்களில் பெரிதளவில் கடலலைகள் எழுந்தன.
ஒகஸ்ட் 5 ஆம் திகதி, ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி அருகே 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




