குழந்தைகளுக்கு கையடக்க தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதற்கு தடை விதித்துள்ள நாடு
சுவீடனில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கையடக்க தொலைபேசி மற்றும் தொலைக்காட்சியில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்க வேண்டும் என்றும் குழந்தைகளை கையடக்க தொலைபேசியை பார்க்க அனுமதிக்கக் கூடாது என்றும் சுவீடன் பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குழந்தைகள் கையடக்க தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொது சுகாதார அமைப்பின் கட்டுப்பாடுகள்
இந்த நிலையில், சுவீடன் பொது சுகாதார அமைப்பு குழந்தைகளின் நலன் கருதி மேற்படி கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
மேலும், 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணிநேரம் மட்டுமே கையடக்க தொலைபேசி மற்றும் தொலைக்காட்சியை பார்க்க அனுமதிக்க வேண்டும் என பொது சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 6 முதல் 12 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு மாத்திரமே கையடக்க தொலைபேசி மற்றும் தொலைக்காட்சியை பார்க்கலாம் என கூறியுள்ளது.
அத்துடன், 13 முதல் 18 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை மட்டுமே கையடக்க தொலைபேசி மற்றும் தொலைக்காட்சியை பார்க்க அனுமதிக்க வேண்டும் எனவும் குழந்தைகள் உறங்குவதற்கு முன் கையடக்க தொலைபேசி உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம் எனவும் குழந்தைகளின் பெற்றோருக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து சுவீடனின் பொது சுகாதார அமைச்சர் ஜாகோப் போர்ஸ்மெட்,
“13 முதல் 16 வயதிற்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 6 மணிநேரம் பள்ளி நேரத்திற்கு வெளியே கையடக்க தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிடுகிறார்கள்.
மிக நீண்ட காலமாக, கையடக்க தொலைபேசி மற்றும் பிற டிஜிட்டல் மீடியா குழந்தைகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி நடவடிக்கைகள், உடல் செயல்பாடு ஆகியவற்றிற்கு குழந்தைகள் அதிக நேரத்தை செலவிடுவதில்லை.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 4 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
