மித்தெனிய முக்கொலைக்கு துபாயிலிருந்து வந்த கட்டளை: துப்பாக்கிதாரியின் வாக்குமூலம்
மித்தெனிய முக்கொலை துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் ஒரு தம்பதியினரும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், துபாயில் உள்ள பெக்கோ சமனுக்குத் தெரிந்த, தனது உதவியாளர் லஹிருவிடமிருந்து பெறப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்தக் கொலைகள் நடத்தப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
குழந்தைகள் கொலை
துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கஜ்ஜாவைக் கொல்ல வந்ததாகவும், ஆனால் இரண்டு குழந்தைகளையும் கொல்லும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர், தான் வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெக்கோ சமனின் சகா , “குழந்தைகள் அங்கே இருந்தாலும் பரவாயில்லை, அவர்களைச் சுட்டுத்தள்ளு” என்று கூறியுள்ளார்.
அதன்படி, குறித்த கொலையை தான் செய்ததாகவும், அதற்கு பதிலாக பெக்கோ சமன் என்ற நபர் தனக்கு 500,000 ரூபாய் தருவதாக உறுதியளித்ததாகவும், முன்பணமாக 250,000 ரூபாய் தனது மனைவியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர் விசாரணை
இருப்பினும், கொலை செய்த பிறகு, மீதமுள்ள 250,000 ரூபாயைப் பெறுவதற்காக பெக்கோ சமன் மற்றும் லஹிரு ஆகியோருக்கு தொலைபேசி அழைப்புகளைச் செய்ததாகவும், ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை என்றும் அவர் பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மித்தெனிய பகுதியில் அமைந்துள்ள ஒரு கல்குவாரியில் தண்ணீரில் மூழ்கியிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 49 நிமிடங்கள் முன்

முதல்முறையாக அணுசக்தி கப்பலை வெளிக்காட்டிய வடகொரியா! அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தல் என தென்கொரியா பதற்றம் News Lankasri

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri

Optical illusion: பந்திற்குள் மறைந்திருக்கும் "5" களில் மறைந்துள்ள "3" ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
