வசமாக சிக்கிய சுரேஷ் சலே..! இந்தியாவில் செய்த இரகசிய மோசடிகள் அம்பலம்..
சுரேஷ் சாலேவை விசாரிக்கின்ற குற்றத்தடுப்புப் பிரிவினுடைய பணிப்பாளர் சானி அபயசேகரவை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குமாறு கோரி நீதி மன்றத்திலே மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சனி ஹேரத் முதன் முறையாக அடிப்படை ஆதாரங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தது மட்டுமல்லாமல் சுரேஷ் சாலே சார்பில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரணிகளை திணரடித்த சம்பவம் நீதிமன்றத்திலே இடம் பெற்றிருந்தது.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சனி ஹேரத் நீதிமன்றத்திலே சுரேஷ் சாலேவுக்கு எதிரான வாதங்களை முன்வைத்த வேளை, சுரேஷ் சாலே 64 பக்கங்கள் இருக்கக்கூடிய கடவுச்சீட்டில் பல பக்கங்களை கிழித்திருந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
அத்துடன் ”மனுதாரர் தரப்பு தூய்மையான கைகளுடன் நீதிமன்றத்தை அணுகவில்லை. மிக மோசமாக அணுகி இருக்கிறார்கள். இதில் பல பொய்கள் இருக்கின்றன. இதனை நீதிமன்றம் ஒரு போதும் கருத்தில் எடுக்கக் கூடாது. இவர்களுடைய அனைத்து வாதத்திறமைகளும் போலிகளால் நிரம்பப்பட்டவை” என அவர் நீதிமன்றத்தில் கடுமையான வாதத்தை முன்வைத்திருந்தார்.
மேலும் ஜூன் 11ஆம் திகதி குறித்த வழக்கானது நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 5 அறிக்கைகள் நீதிமன்ற கவனத்திற்கு எடுத்த வரப்பட்டதாகவும் சுதர்சனி ஹேரத் கூறியுள்ளார்.
அவர் முன்வைத்த மேலும் பல ஆதாரபூர்வமான வாதங்களை ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan