மீண்டும் களத்தில் திமுக - ஸ்டாலினின் ஒரே ஒரு வார்த்தையில் விஜய்க்கான வாய்ப்பு
தவெக தலைவர் விஜய்க்கு, முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினால் ஆதரவு கொடுக்கலாம் என காதர் மொய்தீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
கூட்டணிக்காக கோரிக்கை விடுத்துள்ள விஜய்
எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இல்லாததால், பெரும்பான்மையை நிரூபிப்பதில் அக்கட்சித் தலைவர் விஜய் சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.
தேர்தலில் பெறும் வெற்றிப் பெற்ற உடன் தவெக தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். ஆனால், முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பே 118 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆளுநர் நிபந்தனை விதித்துள்ளார்.
இதனால் அவர் முதலமைச்சராக பதவியேற்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தாலும், மொத்த எண்ணிக்கை 113 ஆக மட்டுமே உயர்கிறது.
ஆட்சி அமைக்க இன்னும் 5 முதல் 7 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் இடதுசாரிகளின் ஆதரவைக் தவெக கோரியுள்ளது.
மீண்டும் திமுக கெடுபிடியில் தவெக
இடதுசாரி கட்சிகள் (சிபிஐ மற்றும் சிபிஎம்) ஆதரவு அளிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இதுத்தவிர சிறிய கட்சிகள் மற்றும் பிற எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற விஜய் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சியிடமும் தவெக ஆதரவு கோரியுள்ளது. ஆனால் திமுக கூட்டணிலேயே தொடர்வோம் அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இருப்பினும் தவெக தரப்பினர் இன்று அவரை நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர்.

இதன்படி, இந்த விவாகரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்னவோ, அதுதான் தங்களுடையது என காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக கூறினால் தவெகவிற்கு ஆதரவு தரத் தயார் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நொடிக்கு நொடி அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! நீலாங்கரை இல்லத்திலிருந்து பொலிஸாருடன் அவசரமாக புறப்பட்ட விஜய்