நொடிக்கு நொடி அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! நீலாங்கரை இல்லத்திலிருந்து பொலிஸாருடன் அவசரமாக புறப்பட்ட விஜய்
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரை சந்திக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஆளுநரை சந்திக்க விஜய் புறப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. புதிய வரவான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் தடம் பதித்துள்ளது.
திட்டவட்ட அறிவிப்பு
இந்த நிலையில் தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, விஜய் நேற்று (06.05.2026) மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கினார்.

ஆனால் அதை பெற்றுக்கொண்ட ஆளுநர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால் தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் விஜய் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரை சந்திக்க புறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திறைசேரியில் மேலும் 500 மில்லியன் கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள குழப்பம் : வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்
you may like this