தனது அரசியல் ஓய்வு காலத்தை அறிவித்த சுமந்திரன்

M. A. Sumanthiran Sri Lanka Sri Lankan political crisis
By Rakesh Dec 19, 2023 11:57 PM GMT
Report

புதிய தலைவர் தெரிவால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஒருபோதும் பிளவடையாது. அது கட்சிக்கு மேலும் வலுச் சேர்க்கும். எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் 60 வயது. 65 வயதில் அரசியலில் இருந்து நான் ஓய்வு பெறுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு பொதுச் சபை உறுப்பினர்களின் சந்திப்பு நேற்று முன்தினம் (18) காரைதீவு தமிழ் அரசுக் கட்சியின் கிளைத் தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கட்சியின் கிளைப் பணிமனையில் நடைபெற்றது.

வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் : ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த டக்ளஸ்

வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் : ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த டக்ளஸ்


இந்த சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கலந்துரையாடல்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஜனநாயக சிறப்பம்சம் கொண்ட கட்சியாகும். இப்படியான தலைவர் தெரிவு இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெற்றால் கட்சி மேலும் வலுப்பெறும்.

தனது அரசியல் ஓய்வு காலத்தை அறிவித்த சுமந்திரன் | Sumanthran Retirement Age Announced

எமது கட்சி போன்று எந்தக் கட்சியிலும் ஜனநாயக விழுமியங்கள் இல்லை. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் பொன்னம்பலம் என்பவர் மாத்திரம்தான் தலைவராக வரலாம்.

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்

எனக்கு இரண்டு மாதங்களில் 60 வயது. 65 வயதில் அரசியலில் இருந்து இளைப்பாறி விடுவேன். எனக்கு முன்னர் இருந்த தலைவர்கள் விட்ட தவறை நான் ஒருபோதும் விடப் போவதில்லை.

2010 இல் இருந்து நான் சம்பந்தனுடன் சேர்ந்து கட்சி செயற்பாடு அத்தனையிலும் பக்கபலமாக இருந்து வந்திருக்கின்றேன். கட்சி மட்ட பேச்சுகள் அனைத்திலும் பங்குபற்றியுள்ளேன்.

தனது அரசியல் ஓய்வு காலத்தை அறிவித்த சுமந்திரன் | Sumanthran Retirement Age Announced

இந்நிலையில், புதிய தலைவர் தெரிவுக்கு நான் சம்மதம் தெரிவித்துள்ளேன்.அடுத்த கட்ட தேசிய முயற்சிக்குப் புதிய தலைவரை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தவராசா கலையரசன், இரா. சாணக்கியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனை : அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை

வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனை : அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை

பிரபல தனியார் உணவகத்தின் மோசமான செயல் : சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை

பிரபல தனியார் உணவகத்தின் மோசமான செயல் : சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US