தேர்தலைத் தள்ளிப் போட முயன்றால் அரசை மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பர் : சுமந்திரன் எச்சரிக்கை

Sri Lanka Parliament M. A. Sumanthiran Election
By Rakesh Jul 11, 2024 11:58 PM GMT
Report

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தியாக வேண்டும். அதுதான் அரசமைப்பு ஏற்பாடு. ஏதேனும் வகையில் அதைக் குழப்பித் தேர்தலைப் பிற்போட முயற்சித்தால் ஜனாதிபதியையும் இந்த அரசையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பர்கள் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(M. A. Sumanthiran) நாடாளுமன்றத்தில் அரச தரப்பைப் பார்த்து எச்சரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதித் தேர்தல் விடயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நேற்று(11) நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையின் மீது உரையாற்றும்போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அர்ச்சுனா தொடர்பில் கொழும்பு சென்ற பிழையான தகவல்!

அர்ச்சுனா தொடர்பில் கொழும்பு சென்ற பிழையான தகவல்!

சர்வஜன வாக்கெடுப்பு

அவர் ஆற்றிய உரையின் சாராம்சம் வருமாறு, ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் தான் என்பது அரசமைப்பிலும் தெளிவாக உள்ளது. அதை இப்போது உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தி விட்டது.

இந்தநிலையில் ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான அரசமைப்புப் பிரிவுகளில் மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டிய தேவை எதுவும் இல்லை.

தேர்தலைத் தள்ளிப் போட முயன்றால் அரசை மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பர் : சுமந்திரன் எச்சரிக்கை | Sumandran S Warning About Elections

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஆறு வருடங்களுக்கு மேல் நீடிப்பதாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற அரசமைப்பின் 83 (ஆ) பிரிவு இவ்விடயங்களில் சம்பந்தப்பட்டது அல்ல.

அதை மாற்றி அமைக்க வேண்டிய தேவையும் இல்லை. அதை மாற்றி அமைப்பதாயின் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்ற கருத்து இருந்ததாலேயே 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அதை மாற்றாமல் அப்படியே விடுகின்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் இணக்கத்தோடுதான் அப்படியே அதை விட்டுவிட முடிவு எடுக்கப்பட்டது.

யார் சம்பந்தன்? அவருக்கு மகுடமா? படுகுழியா?

யார் சம்பந்தன்? அவருக்கு மகுடமா? படுகுழியா?

ஜனாதிபதியின் தரப்பு

அதனால் சர்ச்சைகளோ குழப்பங்களோ ஏதுமில்லை. ஏற்கனவே ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள்தான் என்பது திட்டவட்டமாகத் தீர்மானிக்கப்பட்ட விடயம. இந்த 83 (ஆ)பிரிவு அரசமைப்பில் இருப்பதால் எந்தக் குழப்பமும் புதிதாக வந்துவிடாது.

ஆனால், இந்தப் பிரிவுக்கு திருத்தம் கொண்டு வருகின்றோம் என்று குழம்பத்தை ஏற்படுத்த ஜனாதிபதியின் தரப்பு முயலுகின்றனர் என்று தோன்றுகின்றது.

தேர்தலைத் தள்ளிப் போட முயன்றால் அரசை மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பர் : சுமந்திரன் எச்சரிக்கை | Sumandran S Warning About Elections

அந்தப் பிரிவைத் திருத்த சர்வஜன வாக்கெடுப்பு என்ற நிலைப்பாடு வருமானால், அதைக் காட்டி தம்முடைய பதவிக்காலம் 5 வருடங்கள்தானா என்பதை ஒட்டிய சர்ச்சையைக் கிளப்பலாம் என்று ஜனாதிபதி எண்ணுகின்றார் போலும். எது, எப்படி என்றாலும், நாடு வரும் ஒக்டோபர் 17 இற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

அது சட்ட ரீதியான கட்டாயம். அதில் கை வைக்க அல்லது தேர்தலைத் தள்ளிப்போட முயற்சி எடுக்கப்பட்டால் அரசையும் ஜனாதிபதியையும் மக்கள் வீதி வீதியாக துரத்தி அடிப்பார்கள்.

ஓட ஓட விரட்டுவார்கள். அதனை முன் எச்சரிக்கையாகக் கூறி வைக்க விரும்புகின்றேன் என்றார் சுமந்திரன் எம்.பி.

வைத்தியர் அர்ச்சுனாவின் முடிவின் பின்னால் மறைந்துள்ள உண்மைகள்

வைத்தியர் அர்ச்சுனாவின் முடிவின் பின்னால் மறைந்துள்ள உண்மைகள்

90 வீதம் நீரை மீதப்படுத்தும் மாதிரி மரக்கறிச் செய்கை வெற்றி

90 வீதம் நீரை மீதப்படுத்தும் மாதிரி மரக்கறிச் செய்கை வெற்றி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

17 Sep, 1999
மரண அறிவித்தல்

அல்வாய், சுண்டிக்குளி

15 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், யாழ்ப்பணம், Victoria, BC, Canada

17 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

07 Sep, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், அளவெட்டி

13 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US