கோட்டாபயவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு இன்று(18.06.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஷ்வர பண்டார சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு சம்பளம்
மத்தியக் குற்றப்புலனாய்வுப் பிரவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு அரச நிறுவனங்களிடம் இருந்து சம்பளம்பெற்ற விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 23 மணி நேரம் முன்
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam