திருகோணமலை கடற்படை தளத்தின் இரகசிய சித்திரவதை முகாமிற்கு சீல் வைப்பு! அம்பலமாகும் பகீர் தகவல்கள்

Trincomalee Sri Lanka Navy
By Kamal Jun 18, 2026 03:26 AM GMT
Report

திருகோணமலை கடற்படை முகாமிற்குள் ‘கன் சைட்’  என்ற பெயரில் இயங்கி வந்த மிகவும் இரகசியமான நிலத்தடி சிறைச்சாலை வளாகத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 60 பேருக்கும் அதிகமான நபர்களை இங்கு தடுத்து வைத்து, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, கப்பம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட பல பாரிய குற்றங்களுடன் இந்த இடத்திற்கு தொடர்பு இருப்பதாக நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், புலனாய்வு பிரிவினரின் இந்த நடவடிக்கை அவ்விசாரணைகளின் தீர்க்கமானதொரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

இந்த இரகசிய சித்திரவதை முகாம் வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக திருகோணமலை நீதவான் விஜயம் செய்ய உள்ளார்.

திருகோணமலை கடற்படை தளத்தின் இரகசிய சித்திரவதை முகாமிற்கு சீல் வைப்பு! அம்பலமாகும் பகீர் தகவல்கள் | Gun Site Camp Sealed

தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தவிர, மேலும் பல நபர்கள் இந்த இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான சான்றுகளுடன் கூடிய தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

கேகாலையைச் சேர்ந்த சாந்த என்பவரின் வழக்கு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கொழும்பில் மேலும் இரு தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் கொழும்பு இலக்கம் 3 நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளன.

இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவரும், திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்களும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விபரங்களும் நீதிமன்றங்களுக்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளன.

இந்த இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சில நபர்களும், அது சார்ந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சில தரப்பினரும் தற்போதைய நிலையில் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலங்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US