பிரபல பாடசாலையொன்றில் ஆசிரியரின் மோசமான செயல் - மாணவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு
குருநாகல் பாடசாலை மாணவர் ஒருவருக்கு தகாத ரீதியில் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் பிரதான நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
குருநாகல் நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் இசை ஆசிரியராக பணியாற்றி வரும் சந்தேக நபர், 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
பொலிஸில் முறைப்பாடு
அவர் பணியாற்றும் பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு தகாத ரீதியில் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரின் முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபரான ஆசிரியரை, குருநாகல் தலைமையக பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளதாக பொலிஸாரினால் சுட்டிக்காட்டப்பட்டது.
சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை கோரிய போதிலும், முன்வைக்கப்பட்ட தகவல்களை பரிசீலித்த பிரதான நீதவான், சந்தேக நபருக்கு பிணை வழங்குவதை திட்டவட்டமாக நிராகரித்ததுடன், அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 15 மணி நேரம் முன்
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam