நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என சர்ச்சைக்குரிய பிரதியமைச்சர் தெரிவிப்பு
நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரட்ன தெரிவித்துள்ளார்.
இரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல வேண்டிய எவ்வித அவசியமமும் தமக்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதி அமைச்சர் சுகத் திலகரட்ன குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் அவுஸ்திரேலியாவில் குடியேறவுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டிருந்தன.
அவுஸ்திரேலியா பயணம்
எனினும் தாம் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என சுகத் திலகரட்ன அவுஸ்திரேலியாவிலிருந்து தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு தாம் 10 முதல் 12 தடவைகள் பயணம் செய்துள்ளதாகவும் இந்த பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஓர் பயணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 20ம் திகதி நாம் நாடு திரும்ப உள்ளதாக சுகத் திலகரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் விளையாட்டுத்துறை தொடர்பில் தம்மிடம் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்ற உள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)