மீண்டும் காசாவில் தீவிரமான போர்! வலுவிழக்கும் போர்நிறுத்தம்
காசா போர்நிறுத்த விவகாரமானது வலுவிழந்து வரும் நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ள விடயம் மத்தியக்கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி எதிர்வரும் சனிக்கிழமை நண்பகலுக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பாவிட்டால் காசாவில் தீவிரமான சண்டை மீண்டும் தொடங்கும் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் முக்கிய விதிகளை மீறியதாக ஹமாஸ் திங்களன்று கூறியதைத் தொடர்ந்து எதிர்வரும் சனிக்கிழமை மேலும் மூன்று பணயக்கைதிகளை விடுவிப்பதை தற்காலிகமாக பிற்போடுவதாக ஹமாஸ் கூறியயுள்ளது.
இந்நிலையில் தற்போது போர்நிறுத்தம் கேள்விக்குறியாகியது.
பணயக்கைதி விவகாரம்
சனிக்கிழமை நண்பகலுக்குள் ஹமாஸ் எங்கள் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பவில்லை என்றால் போர்நிறுத்தம் முடிவுக்கு வரும், மேலும் ஹமாஸ் தீர்க்கமாக தோற்கடிக்கப்படும் வரை இஸ்ரேலிய பாதுகாப்பு படை மீண்டும் தீவிர சண்டையைத் தொடங்கும் என்று நெதன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சரவையுடனான கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட காணொளியில் தெரிவித்துளார்.
நெதன்யாகுவின் காணொளிக்கு பின்னர், இஸ்ரேலிய இராணுவம் தெற்கில் கூடுதல் படைகளை அனுப்பும் என்று கூறியது.
மேலும், மேலதிக வீரர்கள் உட்பட கூடுதல் துருப்புக்களுடன் வலுவூட்டல்களை அதிகரிக்க இஸ்ரேலிய இராணுவத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)