கொழும்பில் வர்த்தகர் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்
கொழும்பின் புறநகர் பகுதியான மோதர பகுதியில் 6 நாட்களுக்கு முன்பு மீன் வியாபாரி ஒருவரின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வேலைக்கு வந்த பெண் ஒருவர், ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள தங்கப் பொருட்களைத் திருடி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட தங்கப் பொருட்களில் 16 தங்க வளையல்கள், 5 சங்கிலிகள், 14 மோதிரங்கள், 5 பென்டன்கள் மற்றும் ஒரு ஜோடி காதணிகள் உட்பட அவை சுமார் 50 பவுண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் முதலாம் திகதி தொழிலதிபர் ஒரு செய்தித்தாளில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தங்க நகைகள் கொள்ளை
அதற்கமைய பணிப்பெண்ணாக வேலைக்கு வந்த பெண்ணைப் பற்றிய எந்த தனிப்பட்ட தகவலையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் வேலைக்கு அமர்த்தியதாக தொழிலதிபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் 7வது நாளிலிருந்து அவரது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நளின் தர்ஷனவின் நெறிப்படுத்தலின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)