ட்ரம்பை சந்திக்க தயாராகும் மோடிக்கு தாக்குதல் அச்சுறுத்தல்!
அமெரிக்காவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவருக்கு எதிராக தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக மும்பை பொலிஸார் வெளியிட்ட கருத்தை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாகவே பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத தாக்குதல்
அதன்படி, பிரதமர் உத்தியோகபூர்வ பயணமாக வெளிநாட்டிற்குச் செல்லும் வேளையில் அவரது விமானம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மும்பை பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அச்சுறுத்தலின் தீவிர தன்மையைக் கருத்தில் கொண்டு, மும்பை பொலிஸார் மற்ற தொடர்புடைய நிறுவனங்களுக்கு தகவல் அளித்து விசாரணையைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விசாரணையின் பின்னணியில் தாக்குதல் அச்சுறுத்தல் அழைப்பு விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேநேரம், இது தொடர்பான மேலதிக விசாரணையினையும் மும்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

குடும்பத்துடன் நடிகர் அஜித் தீபாவளியை எப்படி கொண்டாடினார் தெரியுமா.. இதோ புகைப்படம் பாருங்க Cineulagam
