இலங்கையில் இருந்து சில வெளிநாட்டவர்களை நாடு கடத்துமாறு உத்தரவு
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வந்து, விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த 12 சீன நாட்டவர்களையும் வியட்நாம் நாட்டவர் ஒருவரையும் உடனடியாக நாடு கடத்துமாறு கொழும்பு பதில் நீதவான் ஹர்ஷன கெக்குனவெல நேற்று உத்தரவிட்டார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக கண்டறியப்பட்ட குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முதல் விசாரணையிலேயே தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் விசா ஏற்பாடுகளை பரிசீலித்த பின்னர் நாடுகடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
கறுப்பு பட்டியல்
குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், சந்தேக நபர்கள் தலா 50,000 ரூபாய் என்ற கணக்கில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு அனைவருக்கும் மொத்தமாக 6.5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம் செலுத்த தவறினால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு கட்டாய ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan