கொழும்பில் காதலனை தந்தையென கூப்பிட மறுத்த பிள்ளையை கொலை செய்த இளம் தாய்
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம பிரதேசத்தில் தனது கணவரை தந்தை என அழைக்காததற்காக தாயாரால் அடித்துக் கொல்லப்பட்ட மூன்று வயது சிறுமியின் உடலில் 75க்கும் மேற்பட்ட வெளிப்புற மற்றும் உள் காயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை அவரது தாயார் பல சந்தர்ப்பங்களில் உலுக்கி தரையில் அடித்துள்ளதாகவும், கைகள், கால்கள் மற்றும் பல்வேறு பொருட்களால் தாக்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மத்தேகொடவில் உள்ள மாகம்மன சமகி மாவத்தை பகுதியைச் சேர்ந்த பெண், தனது மூன்று வயது மகளின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து மத்தேகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கணவனை பிரிந்த மனைவி
அந்தப் பெண் சிறிது காலத்திற்கு முன்பு தனது கணவரைப் பிரிந்து, சுமார் மூன்று மாதங்களாக ஒரு வாடகை வாகன ஓட்டுநருடன் வாழ்ந்து, அவருடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தார்.

அந்த தம்பதியினர் மூன்று வயது சிறுமியை பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்து தாக்கியதாக புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களுடன் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
தந்தை என்று அழைக்காததற்காக சிறுமியின் தாயும், அந்த நபரும் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கொடூரமாக தாக்குதல்
இவ்வாறு தாக்கப்பட்ட சிறுமி, ஒவ்வாமை காரணமாக ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனையில், சிறுமி தாக்குதலின் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபரான தாயின் கணவர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மத்தேகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக குமார உள்ளிட்ட அதிகாரிகள் குழு சந்தேக நபரைக் கைது செய்ய விரிவான விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
சீனாவின் ரகசிய அணு ஆயுத விரிவாக்கம்- மலைப்பகுதியில் புதிய ஆயுத நிலையங்கள் கண்டுபிடிப்பு News Lankasri