கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் காற்றின் தரம் குறைந்து வருவதன் காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களின் கரு பாதிக்கப்படும் என்று சுவாச வைத்தியர் துமிந்த யசரத்னே தெரிவித்துள்ளார்.
மாசுபட்ட காற்றானது கருவின் எடையைக் குறைக்க வழிவகுக்கும் என்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மாசுபாட்டின் தாக்கம் குறித்து ஆய்வு
மேலும் சிசு இறந்த நிலையில் பிறக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வருகை தரும் நோயாளிகளில் 40 வீதமானோர் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாகவும் யசரத்னே தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பேராதனை மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகங்கள் ஆகியவை தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாட்டின் தாக்கம் குறித்து ஆய்வொன்றை நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
