யாழில் திடீரென மக்கள் கூடியமையினால் ஏற்பட்ட குழப்பம்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் மக்கள் திடீரென கூடியமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
மல்லாகத்திலுள்ள காங்சேகன்துறை இலங்கை வங்கி கிளைக்கு முன்னால் பெருமளவு மக்கள் கூடியுள்ளனர். வீட்டுத்திட்டம் ஒன்றுக்காக வங்கி கணக்கு இலக்கத்தை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளனர்.
அதற்கான இறுதித்தினமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கிக் கணக்கை ஆரம்பிக்கும் நோக்கில் பெருமளவு மக்கள் வங்கிக் கிளையின் முன்னாள் கூடியுள்ளனர்.
வீட்டுக்கு இருவர் என்ற அடிப்படையில் மக்கள் கூடியுள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுகாதார விதிமுறைகளை மீறி மக்கள் கூடியுள்ளமை அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! போர்க்களத்தில் இறங்கப்போகும் உக்ரைன் ரோபோக்கள் (காணொளி) News Lankasri