முன்பள்ளி ஒன்றில் வைத்து துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவர்கள்
யாழ். கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், ஹெரோயினுக்கு அடிமையான 25 - 27 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள் மூவரால், 15 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் முன்பள்ளி ஒன்றில் வைத்து கடந்த வாரம் நடந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் செய்த முறைப்பாட்டு
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து முன்வைத்த முறைப்பாட்டை மீளப்பெறுமாறு சிறுவனின் தாயாருக்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் அழுத்தம் கொடுத்து மிரட்டல் விடுக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வன்புணர்வுக்குள்ளான சிறுமி
இதேவேளை, யாழ். கோப்பாய் பிரதேசத்தில் ஹெரோயினுக்கு அடிமையான 14 வயதுச் சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை வன்புணர்ந்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு நன்னடத்தை பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த தகவல் தற்போதே ஊடகங்களுக்குத் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam