மூன்று இளம் பிக்குகள் துஷ்பிரயோகம்: விகாராதிபதிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் (Photos)
மூன்று இளம் பிக்குகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான, கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குளை பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு நேற்று (16) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இளம் பிக்குகள்
அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இளம் பிக்குகள் கல்முனை பகுதி விகாரை ஒன்றில் வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
அதன் அடிப்படையில் செப்டெம்பர் 13 ஆந் திகதி கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசேட பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனடிப்படையில் கல்முனை நீதிமன்ற நீதிவான் கைதான சந்தேகநபரை செப்டெம்பர் மாதம் (16.9.2022) ஆந் திகதி வரை 3 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
மறுக்கப்பட்ட பிணை
இந்நிலையில் நேற்று (16.9.2022) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகளின் நீண்ட நேர சமர்ப்பணங்கள், விண்ணப்பங்கள் ஆராயப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ அறிக்கை இதுவரை மன்றிற்கு கிடைக்கப்பெறாமை, சம்பவம் தொடர்பிலான விசாரணை பூரணப்படுத்தப்படாமை ஆகியவற்றை கருத்திற் கொண்டு சந்தேகநபரான தேரரின் பிணை கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
பௌத்த மதகுருவால் இளம் பிக்குகளுக்கு நேர்ந்த கதி! வழங்கப்பட்டுள்ள உத்தரவு (Video) |
பௌத்த மதகுருவால் இளம் பிக்குகள் துஷ்பிரயோகம்: பொலிஸார் தீவிர விசாரணை |
துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பௌத்த பிக்குவிற்கு விளக்கமறியல் |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
