பௌத்த மதகுருவால் இளம் பிக்குகளுக்கு நேர்ந்த கதி! வழங்கப்பட்டுள்ள உத்தரவு (Video)
3 இளம் பிக்குகளை கல்முனை பகுதியில் விகாரை ஒன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (13.09.2022) கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இளம் பிக்குகளுக்கு திடீர் சுகவீனம்
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் புதிதாக இணைந்த 3 இளம் பிக்குகள் திடீர் சுகவீனம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் குறித்த வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய, அம்பாறை பொது வைத்தியசாலையில் உள்ள பிக்குகள் தனியான சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரியிடம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தலைமை பௌத்த துறவியினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியதாக சட்ட வைத்திய அதிகாரியிடம் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த 3 இளம் பிக்குகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியும் தனது வைத்திய அறிக்கை ஊடாக அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு குறிப்பிட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மருத்துவ அறிக்கை பிரகாரம் செப்டெம்பர் 01ஆம் திகதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் பேரில் மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் வைத்தியசாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கைக்கான தயார்ப்படுத்தல்
சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையானது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பிரகாரம் செப்டெம்பர் 5ஆம் திகதி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய செப்டம்பர் 06ஆம் திகதி துஷ்பிரயோகம் காரணமாக பாதிக்கப்பட்ட 3 இளம் பிக்குகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேகநபராக கருதப்படும் பௌத்த மதகுரு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று கல்முனை தலைமையக பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட இளம் பிக்குகளின் பெற்றோர் ஏற்கனவே வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அம்பாறை பகுதியில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸார் கல்முனை பகுதியில் உள்ள குறித்த பௌத்த விகாரைக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் சந்தேகநபரிடம் வாக்குமூலங்களை பொலிஸார் பெற்றுள்ளனர்.
இளம் பிக்குகளின் ஆசன பின்துவாரத்தில் காயங்கள் மற்றும் தழும்புகளும் காணப்படுவதாகவும் மூவரும் ஏற்கனவே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுபட்டவர்கள் எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த பௌத்த மதகுரு தலைமறைவாகி இருந்ததாக தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்ய பொலிஸாரினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam
