மாணவிகளின் புகைப்படங்களை ஆபாச படங்களாக மாற்றிய மாணவன் கைது - சிக்கலில் அதிபர்
குருணாகல் நிக்கவெரட்டிய பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையை சேர்ந்த மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமான மாற்றியமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுமிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமான புகைப்படங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, குற்றத்தை செய்ய உதவியதாக சந்தேகத்தின் பேரில் நிக்கவெரட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவால் பாடசாலை மாணவன் மற்றும் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிணையில் விடுவிக்க நடவடிக்கை
எனினும் மாணவன் மற்றும் அதிபரை தலா 1 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிணை வழங்குபவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் எனவும் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மாணவர் தனது வயதான பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை மாற்றியதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த புகைப்படங்கள் அடங்கிய கையடக்க தொலைபேசியை கைப்பற்றிய இரண்டாவது சந்தேக நபரான அதிபர் இது குறித்து பொலிஸாருக்கு தெரிவிக்காமல் பிரச்சினையை தீர்க்க முயன்றுள்ளார்.
கையடக்க தொலைபேசி
மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்கள் அடங்கிய கையடக்க தொலைபேசியை ஒரு மாதத்திற்கும் மேலாக அதிபரின் வசம் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, கைது செய்யப்பட்ட மாணவரும் அதிபரும் இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 286, 361 மற்றும் 346 இன் கீழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டனர்.
இந்த மாத இறுதியில் மீண்டும் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



