ஜே.கே பாயின் கைதால் அம்பலமாகவுள்ள ஆட்கடத்தல் தரவுகள்!
இலங்கையின் குற்றவழக்குகளில் பெரும் அதிர்ச்சியையும், பொலிஸாருக்கு சவாலையும் ஏற்படுத்திய கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு முளையாக செயற்பட்ட இஷாரா செவ்வந்தி குற்றப்புலனாய்வு துறையின் சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு துறையின் பணிப்பளார் சானி அபேசேகரவின் மேற்பார்வையிலும், எ.எஸ்.பி ரொஹான் ஒலுகலவின் வழிகாட்டுதலிலும் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்தி குறித்த குற்றச்செயல் நடைபெற்ற எட்டு மாதங்களுக்குப் பிறகு நேபாளத்தில் கைது செய்யப்பட்டார், மேலும் இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு பேர் நேற்று நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
ரோஹன் ஒலுகலவின் திட்டம்
இந்த நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்தே எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பதையும், எதிர்காலத்தில் 'ஜே.கே பாய்' என்ற நபரிடமிருந்து பெறப்படும் முக்கியமான தகவல்களையும் கொவல்துறையினர் விசேடமாக நோக்கவுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு அண்டை நாடான இந்திய புலனாய்வு அமைப்புகயின் ஆதரவும் பெறப்பட்டதாக அறியமுடிகிறது. சிறிதுகாலம் இஷாரா இந்தியாவில் பதுங்கியிருந்த நிலையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கு மாகாண வடக்கு மாவட்ட குற்றப்பிரிவு இயக்குநர், உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் ஆய்வாளர் கிஹான் டி சில்வா தலைமையிலான குழுவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணைகளின்படி, மொரீஷியஸ் பெண்ணாக போலி கடவுச்சீட்டை தயாரித்து மொரீஷியஸுக்குத் தப்பிச் செல்ல இஷாரா திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்தத் திட்டம் பாதாள உலகக்குழு தலைவர் கெஹல்பத்தர பத்மே என்ற குற்றவாளியால் தீட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் இஷாராவிடமிறுந்து கண்டுபிடிக்கப்பட்ட போலி கடவுச்சீட்டு அவருடன் கைது செய்யப்பட்ட ஜே.கே. பாய் என்ற நபரால் தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
மொரீஷியஸின் குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தின் சில அதிகாரப்பூர்வ முத்திரைகளுடன் அவரை மொரீஷியஸுக்கு அனுப்புவதே இவர்களின் திட்டம் என கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டை விட்டு தப்பிய இஷாரா
யாழ்ப்பாணத்தை சேர்ந்ததாக கருதப்படும் ஜே.கே. பாய், துபாயில் அடிக்கடி தங்கியிருப்பவர் என கூறப்படுகிறது. இவர் குற்றவாளியாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை என்றாலும், அவர் நாட்டிலிருந்து குற்றவாளிகள் தப்பிச் செல்வதில் ஈடுபட்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச மாஃபியா கும்பல்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. விசாரணைகளின்படி, இஷாரா நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவுவதற்காக, ஜே.கே. பாய்க்கு கெஹல்பத்தர பத்மே ரூ.10 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை வழங்கியுள்ளார்.
மேலும், இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு மட்டும் கெஹல்பத்தர பத்மே சுமார் ரூ.6.5 மில்லியன் செலவிட்டுள்ளார் என்பதும், பின்னர், அவரது செலவுகளுக்காக ஒரு கோடிக்கும் அதிகமாக வழங்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.
இஷாரா நேபாளத்தில் தங்கியிருப்பதை சி.ஐ.டி அதிகாரிகள் கண்டுபிடித்த பிறகு, அவரை சிக்க வைக்கும் ஒரு இரகசிய நடவடிக்கை இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் மிகக் குறைந்த குழுவை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்டர்போலின் உதவியுடன், ஐ.ஜி.பி பிரியந்த வீரசூரிய, சட்டத்தரணி மேற்பார்வையின் கீழ் மூத்த துணை டி.ஐ.ஜி அசங்க கரவிட்ட உள்ளிட்ட சி.ஐ.டி அதிகாரிகளால் இந்த நடவடிக்கை ஆறு வாரங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இஷாராவை பிடிக்கும் நடவடிக்கையில் நேபாளத்தில் உள்ள உள்ளூர் பொலிஸாரின் ஒரு குழுவும் ஈடுபட்டுள்ளது. மேலும், ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா முதலில் ஜே.கே. பாயைக் கைது செய்துள்ளனர்.
கூடுதல் விசாரணை
அவர் காத்மாண்டுரில் ஒரு பேருந்து நிலையத்துக்கு அருகில் தங்கியிருந்துள்ளார். ஜே.கே. பாய் கைது செய்யப்பட்ட பிறகு, இஷாரா தொடர்பில் விசாரித்த பிறகு அவர் இருக்கும் இடம் பற்றிய தகவல்களைப் பெற முடிந்ததாக அறியப்படுகிறது.
ஆனால் சரியான இடத்தை அடையாளம் காண கூடுதல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்ததாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இஷாராவின் கையடக்க தொலைபேசி எண்ணை இணைய பகுப்பாய்வு செய்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது தொலைபேசி நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அதிகம் உள்ள, சுற்றுலாப் பயணிகள் அதிகம் வசிக்கும் பக்தபூர் பகுதியில் சுமார் 800 சதுர மீட்டர் பரப்பளவில் தொலைபேசி அலைவரிசை பரவியிருந்ததால், ஜே.கே. பாய் இஷாராவை அழைத்து பணம் கொடுக்க ஒரு இடத்திற்கு வரச் சொல்லும் வகையிலான தந்திரோபாயத்தை அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இஷாரா தனது வீட்டை விட்டு வெளியே வந்தபோது நேபாள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இஷாரா கைது செய்யப்பட்ட இடத்துக்கு ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அவருடன் கைது செய்யப்பட்ட இலங்கை குழு ஏற்கனவே தங்கியிருந்ததாக அறியப்பட்டுள்ளது.
இஷாரா இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் போல் நடித்து நேபாளத்தின் பக்தபூரில் தங்கியிருந்ததாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆடம்பரமான வீட்டை வீட்டின் உரிமையாளரான ஜே.கே. உடன் வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜே.கே. பாய் ஒரு மாதமாக அங்கேயே வசித்து வந்துள்ளார்.
இஷாரா, ஜே.கே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்திற்கு அழைத்து வரப்பட்டு தங்குமிடம் அளிக்கப்பட்ட மேலும் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த "தக்சி" என்ற பெண்ணும் ஒருவர்.
தக்சி வகுத்த திட்டம்
அவர் இஷாராவைப் போலவே இருந்துள்ளார். மேலும் இஷாராவின் புகைப்படம் மற்றும் தரவு பதிவுகளைப் பயன்படுத்தி போலி கடவுச்சீட்டு உருவாக்கி இஷாராவை ஐரோப்பாவிற்கு அனுப்பத் தயாராக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் தக்சியுடன் இருந்த சுரேஷ் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவர் மீது கொலை உட்பட பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன, அத்தோடு கேரள கஞ்சா கடத்தலிலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட மற்ற இருவர் நுகேகோடாவைச் சேர்ந்த "பேபி" மற்றும் கம்பஹாவைச் சேர்ந்த "பபா" என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பேபி மற்றும் பபா எனப்படும் சந்தேகநபர்கள் பாதாள உலக குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு நுகேகோடாவின் ஜம்புகஸ்முல்லாவில் ஒரு தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பபி பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார். கைதுசெய்யப்பட்ட போது 50 லட்சம் ரூபாய் கொடுத்து தன்னை கைது செய்யாமல் விடுவிக்க பபி கோரியதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் பங்கேற்ற பொலிஸ் அதிகாரி ஒலுகல, தொடர்புடைய நடவடிக்கைக்காக நேபாளத்திற்கு தந்திரோபாய முறையில் சென்றுள்ளார்.
தனது தொலைபேசி எண்ணை இலங்கையில் செயல்படும் வகையில் காட்டிக்கொண்டு அவர் நேபாளம் சென்ற பிறகு தூதரக அதிகாரிகள் அவருக்கு உதவிதாக தெரிவிக்கப்படுகிறது.
சஞ்சீவ கொலைக்குப் பிறகு இஷாரா மூன்று நாட்கள் நாட்டில் தங்கி, மதுகம மற்றும் மித்தேனிய பகுதிகளில் சுற்றித் திரிந்த பிறகு யாழ்ப்பாணத்திற்கு சென்று யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.
பக்கோ சமனின் ஆலோசனை
கொலைக்குப் பிறகு மத்துகமவுக்குச் சென்ற இஷாரா செவ்வந்தி, தன்னை அடையாளம் காண முடியாதபடி தனது தலைமுடியை வெட்டி, மித்தெனியாவுக்கு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
பக்கோ சமனின் ஆலோசனையின் பேரில், பத்திரிகையாளர் போல் மாறுவேடமிட்ட சுப்புன் என்ற நபர் அவருக்கு உதவியதாக தெரியவந்துள்ளது.
மித்தேனியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் பயணித்த சுப்புன் மற்றும் இஷாரா செவ்வந்தி, அங்கிருந்து படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் ஜூலை 21 ஆம் திகதி இந்தியா சென்றதாகவும், இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு தொடருந்து பயணம் செய்து திபாஸ் பார்க் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்ததாக அறியப்பட்டுள்ளது.
இஷாரா உட்பட நான்கு பேர் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர், மற்ற இருவரும் பேலியாகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நுகேகோடா பாபி தென்மேற்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கம்பஹா பபா பேலியாகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டிலிருந்து தப்பிச் சென்று சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் மேலும் விசாரணை நடத்தப்படும் என நம்பப்படுகிறது.
வெளிநாட்டில் அடைக்கலம்
இந்த நடவடிக்கையில் இஷாராவை விட ஜே.கே பாய் பொலிஸ் பிரிவுக்கு மிகவும் முக்கியமானவராக கருதப்படுகிறார்.
ஏனெனில், அவர் சர்வதேச மாஃபியா குழுக்களுடன் தொடர்பில் இருந்து பல பாதாள உலகக் குற்றவாளிகளை நாட்டிலிருந்து கடத்து வெளிநாட்டில் அடைக்கலம் கொடுத்த பின்னணியில் அவர் முக்கிய நபராக கருதப்படுகிறார்.
ஜே.கே. பாயை விசாரிப்பதன் மூலம் இந்த சர்வதேச வலையமைப்பை வெளிக்கொணர முடியும் என்று சி.ஐ.டி நம்புவதாக கூறப்படுகிறது. இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நேரத்தில், இஷாரா செவ்வந்தி கூறுகையில், "ஒலுகலா சார் ஒரு நாள் வந்து என்னைக் கைது செய்வார் என்று நினைத்தேன். நான் 7 மாதங்கள் நேபாளத்தில் சிக்கிக் கொண்டேன், அதனால் எனக்கு சலிப்பாக இருந்தது.
இப்படியே இருப்பதை விட இலங்கைக்குச் செல்வது நல்லது என்று நினைத்தேன். ஆனால் நான் இலங்கைக்குச் சென்றால், பொலிஸாரால் பிடிபடுவேன், அதனால் நான் இப்படியே இருந்தேன்," என்று கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
