க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு
2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பொன்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ளார்.
அதன்படி குறித்த பெறுபேறுகள் ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பின் வெளியிடப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடைத்தாள் திருத்தும் பணி
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 12ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
அதன்படி, முதல் கட்டம் மார்ச் 12 முதல் 23 ஆம் திகதி வரையிலும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01 முதல் 10 ஆம் திகதி வரையிலும் நடைபெறும்.

நடைமுறைத் தேர்வுகள் ஏப்ரல் 22 முதல் 30ஆம் திகதி வரை நடைபெறும்.
இந்த செயல்முறை முடிந்தவுடன், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான திகதி குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri