மத்திய கிழக்கு போர் - ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
ஈரான் மீதான தனது தாக்குதலால் அமெரிக்கர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை முதல் முறையாக ஒப்புக்கொண்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாரசீக வளைகுடாவில் நடக்கும் சண்டையின் விளைவாக எண்ணெய் விலைகள் உயர வாய்ப்புள்ளது என்றும், ஆனால் இறுதியில் அவை குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28 ஆம் திகதி ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் இராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது.
ஈரானுக்கு எதிரான போருக்குப் பின்னர்
இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனால், மசகு எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துள்ள நிலையில் ஈரானுக்கு எதிரான போருக்குப் பிறகு எண்ணெய் விலை குறையும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறிது காலத்திற்கு மசகு எண்ணெய் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றும் ஈரானுக்கு எதிரான போருக்குப் பின்னர் முன்பைவிட விலை குறைவடையும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள எண்ணெய் கப்பல்களை அமெரிக்க கடற்படை பாதுகாக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri