மெஸ்ஸி ஆர்ஜென்டீனா இரசிகர்களுக்கு அனுப்பிய உருக்கமான கடிதம்
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராகத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அர்ஜென்டீனா அணித் தலைவர் லியோனல் மெஸ்ஸி ரசிகர்களுக்கு உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தத் தோல்வியால் ஏற்பட்ட வலி மிகப்பெரியது; இந்தக் காயம் ஆற சிறிது காலம் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
கொடூர தாக்குதலின் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியான ராஜபக்ச குடும்பத்தினர்..! அம்பலமாகும் சதித்திட்டம்
சாதனை படைத்துள்ள அணி
எனினும், நாம் கடந்து வந்த நல்ல தருணங்களையும், நமது முழுத் திறனையும் வெளிப்படுத்திப் பல போட்டிகளில் மீண்டு வந்த நினைவுகளையும் நான் உறுதியோடு நெஞ்சில் நிறுத்த விரும்புகிறேன். அந்த தருணங்கள் என்றும் நம் நினைவில் நிலைத்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த அணியின் உழைப்புடனும் முயற்சியுடனும் இணைந்து, எம்மை மீண்டும் உலகின் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாக உயர்த்திய முழு நாட்டின் ஆதரவையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாம் அடைந்த சாதனையை உணர்வது கடினமாக இருக்கலாம், ஆனால் இந்த அணி தொடர்ந்து இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உங்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துகளுக்கும் செய்திகளுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள். மீண்டும் ஒருமுறை, நாம் அனைவரும் ஒரு நாடாக இணைந்து, அர்ஜென்டீனாவாசி என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய ஸ்பெயின் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மெஸ்ஸி தனது உருக்கமான கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் News Lankasri
'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' பாடலுக்கு நடனமாடிய நடிகை மாளவிகா வா இது! லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ Cineulagam