போதைப்பொருள் வியாபாரியின் மனைவியிடம் மோசமாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்
கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியிடம் இருந்து அவரின் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரிய பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காக, இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் குறித்த அதிகாரி கோரியுள்ளார்.
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் ஓட்டுமாவடியைச் சேர்ந்த பொலிஸ் உப பரிசோதகர் (எஸ்.ஜ) ஒருவரே இச்சம்பவத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள்..
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 2021ஆம் ஆண்டு திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்கு ஒரு தொகை பணம் மற்றும் அந்த வியாபரியின் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த வியாபாரி இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளன.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டு கடமையாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், அவரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21