ஈரானின் அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலினால் பதற்றம்! பதுங்கு குழிகளுக்குள் மக்கள்
மத்திய கிழக்கில் யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் பல பகுதிகளை இலக்கு வைத்து ஈரான் பாரிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதன் காரணமாக இஸ்ரேல் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுவதுடன், மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி விரைந்துள்ளனர்.
இஸ்ரேலிய உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் இஸ்ரேலியர்களின் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மக்கள் உடனடியாக பதுங்கு குழிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
ஈரானில் இருந்து மேலும் ஏவுகணைகள் ஏவப்படும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அமைப்புகள் "அச்சுறுத்தலைத் தடுக்க" செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
புதிய அறிவிப்பு
பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களுக்குள் நுழைந்து புதிய அறிவிப்பு வெளியாகும் வரை அந்த இடத்திலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
"பாதுகாக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியேறுவது வெளிப்படையான உத்தரவைப் பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும்;.உள்நாட்டு கட்டளை உத்தரவுகளின்படி தொடர்ந்து செயல்படுங்கள்" என்றும் மேலும் கூறியுள்ளது.
விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri