வவுனியாவில் குளத்தில் நீராடச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி
வவுனியா - மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக மாமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(18.01.2026) இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்பு
வவுனியா - கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று(18) மாலை நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது, குறித்த மாணவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், வவுனியா, கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிவலிங்கம் டனுசியன் எனும் உயர்தர வகுப்பு மாணவன் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், மாமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam