வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்.. வெளியான கடந்த ஆண்டுக்கான புள்ளி விபரங்கள்
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025ஆம் ஆண்டில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த பயணிகள் வாகனங்களில் 10 வீதம் மின்சார வாகனங்கள் (EVs) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிபரங்கள் மற்றும் சந்தை தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் 64,556 கார்கள் மற்றும் SUVகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டன . இவற்றில், 6,439 முழு மின்சார வாகனங்கள்.
மொத்த இறக்குமதியில் 29வீதம் அல்லது 18,709 வாகனங்கள் கலப்பின வாகனங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் நாட்டம்
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிக விலை கொண்ட சொகுசு மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகமாக இருந்த நிலையில், நான்காவது காலாண்டில், மக்களின் கவனம் மலிவு விலை மின்சார வாகன பிராண்டுகளின் மீது திரும்பியுள்ளது.

இதற்கிடையில், மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதில் இலங்கை பல அண்டை நாடுகளை விட முன்னணியில் இருப்பதாக ஸ்பார்க்வின் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
இந்த வாகனங்களின் சதவீதம் (2025) இலங்கையில் 10வீதம், இந்தியாவில் 2 - 3வீதம், மலேசியாவில் 5வீதம், தாய்லாந்தில் 15வீதம் மற்றும் சிங்கப்பூரில் 43வீதம் எனக் காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய மின்சார வாகன உரிமையாளர்கள் இந்த தொழில்நுட்பத்தின் எதிர்கால திறனை உணர்ந்த "ஆரம்பகால பயனர்கள்" என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2026ஆம் ஆண்டில் நடுத்தர அளவிலான கார் வாங்குபவர்களிடையே மின்சார வாகனங்களும் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்தப் போக்கை மேலும் முன்னேற்றுவதற்கு, நாட்டில் வலுவான மின்னேற்றம் உள்கட்டமைப்பை நிறுவுவது அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri