ஸ்பெயினில் கோர விபத்து! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
புதிய இணைப்பு
தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்றுள்ள அதிவேக தொடருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்றுள்ள அதிவேக தொடருந்து விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஸ்பெயின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கோர விபத்து
கோர்டோபா (Cordoba) நகரத்திற்கு அருகிலுள்ள அடமுஸ் (Adamuz) பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
ஸ்பெயின் தொடருந்து திணைக்களத்தின் தகவலின்படி, ஒரு அதிவேக தொடருந்து தண்டவாளத்தை விட்டு விலகி அருகிலிருந்த மற்றொரு தண்டவாளத்தில் சென்ற தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
2 trains collided in Spain, causing more than 20 fatalities & dozens of serious injuries.
— NoHoldsBarred (@AussieSteve64) January 19, 2026
The collision occurred around 8 PM, when the Iryo train on the Malaga-Madrid route derailed, jumped track & was slammed into by another train - the Renfe Alvia from Madrid to Huelva. pic.twitter.com/SIh4b34ZZ7
அதே நேரத்தில், ஹுயெல்வா நோக்கி எதிர்திசையில் பயணித்த மற்றொரு தொடருந்திலும் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் சுமார் 73 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மீட்பு பணி
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), நாடு முழுவதும் பாரிய துக்கம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

விபத்து ஏற்பட்ட நேரத்தில் 300-க்கும் அதிகமான பயணிகள் குறித்த தொடருந்துகளில் பயணித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஸ்பெயினின் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்பு பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam