நுவரெலியாவில் போக்குவரத்து ஒழுங்கு கேள்விக்குறி: நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
நுவரெலியா - நானுஓயா குறுக்கு வீதி வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்து தடுப்புகள் அமைத்தாலும், தடைகளை மீறி செல்லும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று(19.01.2026) காலை கனரக வாகனம் ஒன்று விதியை மீறி அதிக எடை ஏற்றி அதிக வேகமாக அத்துமீறி சென்றதாக குறித்து வீதியோரத்தில் வசிக்கும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நானுஓயா குறுக்கு வீதியூடாக கனரக வாகனங்கள் செல்வதை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தடை செய்யப்பட்டது.
இருப்பினும், தற்போது தொடர்ந்து இருபுறங்களிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் விதிமுறைகளை மீறி, அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் நாள்தோறும் இரவு - பகல் பாராது சென்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் கோரிக்கை
மேலும், கண்காணிப்பில் ஈடுபட வேண்டிய பொறுப்பு வாய்ந்த போக்குவரத்து பிரிவினர் பெயரளவிலே ஆய்வு செய்யாத காரணத்தினால் நாளுக்கு நாள் குறித்த வீதியூடாக கனரக வாகனங்கள் சென்று விபத்து அபாயம் பெருகி வருகிறது.
அத்துடன், 3.2 கிலோமீட்டர் தூரம் கொண்ட வீதியானது, பாரிய வளைவுகளையும், பள்ளத்தையும் கொண்டது. இதில் தற்போது கனரக வாகனங்கள் சென்று வருவதற்கு பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனயீனமும், பொறுப்பற்றதன்மையும் நேரடியாக மக்களை பாதிக்கிறது.
எனவே, நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸார் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் இங்கு செல்லாமல் தடுப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam