கொழும்பு துறைமுகத்தில் பத்து வருடங்களாக தேங்கி கிடக்கும் கொள்கலன்கள்
கொழும்பு துறைமுகத்தில் பத்து (10) வருடங்களாக தேங்கி கிடக்கும் கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கம் அவசர முடிவெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பத்து (10) வருடங்களாக 3000 கொள்கலன்கள் தொடர்பில் இலங்கை சுங்கத்திற்கு அதிகாரம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கை
அதிகமான இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி காரணமாக துறைமுகத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் அநுர கருணாதிலக்க அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சுமார் 8,000 கொள்கலன்கள் அனுமதி பெற திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

புதிதாக நிறுவப்பட்ட புளூமெண்டல் யார்டுக்கு குறைந்த ஆபத்துள்ள கொள்கலன்களை அனுப்பவும், இலங்கை சுங்கத்தின் முழு மேற்பார்வையின் கீழ் அனுமதி நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam