மினுவாங்கொட பகுதியில் ஏற்பட்ட குழப்பம்: பலியான பாடசாலை மாணவன்
கம்பஹா, மினுவாங்கொட வீதியில் உள்ள வீதியவத்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று காலை 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேகமாக வந்த லொறியொன்று பாடசாலை மாணவன் மீது மோதி, பின்னர் ஒரு கார் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி மீது மோதி குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு விபத்தினை ஏற்படுத்திய லொறியில் மதுபான போத்தலொன்று இருந்ததாகவும், சம்பவத்தின் பின்னர் அங்கிருந்து தப்பியோடிய சாரதி கம்பஹா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
