மகிந்தவை அடுத்து மைத்திரி....! கடும் காலதாமத நெருக்கடியில் அரசு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள கெப்பிட்டிபொல மாவத்தையில் உள்ள தனது வீட்டை காலி செய்ய கால அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி வரை குறித்த வீட்டிலிருக்க தனக்கு அனுமதி தருமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், அவர் ஏற்கனவே தனது அனைத்து வாகனங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பில் வீடுகளை வழங்க தொழிலதிபர்கள் விருப்பம்
இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன விரைவில் பத்தரமுல்லையில் உள்ள ஒரு வீட்டிற்கு குடிபெயர்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொழும்பில் வீடுகளை வழங்க மூன்று தொழிலதிபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
எவ்வாறாயினும் மைத்திரிபால சிறிசேன இன்னும் அந்த வீடுகளை ஏற்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருந்தது.
இதேவேளை, "ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் குடியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மிகப்பெரிய வரவேற்பு பெறும் காந்தாரா Chapter 1... முதல்நாள் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? Cineulagam
