சர்வதேச சமூக நீதி தினத்தில் நுவரெலியாவில் உரிமை கோரி போராட்டம்
தமிழர்களின் உரிமைகளை உள்ளடக்கிய சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் குறித்த போராட்டமானது, இன்று (20.02.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் , சமூக அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் ,கண்டி சமூக நிர்வாகத்தின் ஒன்றியங்கள் இணைந்து நுவரெலியா , பதுளை ,கண்டி போன்ற பகுதிகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் இளைஞர்கள் யுவதிகள் என சர்வதேச நீதி தினத்தில் தமது கோரிக்கை அடங்கிய வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரத் - லங்கா வீடமைப்பு
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுவாக தமிழர்களை இந்திய தமிழர்கள் எனக் கூறுகின்றனர் நாட்டில் மலையகம் 200 என பல இடங்களில் பல கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

அத்துடன் , ஒரே தடவையில் 1300 புதிய வீடுகள் அமைப்பதற்கான "பாரத் - லங்கா வீடமைப்பு " திட்டம் இந்தியாவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மலையக மக்களுக்கும் எவ்விதமான பாரபட்சமின்றி வீடுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதன் போது ஆர்ப்பாட்டமும் முன்வைத்திருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri