பேரணியில் இருக்கை இல்லாமல் தடுமாறிய எதிர்க்கட்சியின் முக்கிய புள்ளி!
நுகேகொடையில் பேரணியில் அமர்வதற்கு இருக்கை இல்லாததால் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல சிறிது நேரம் அங்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நுகேகொடையில் எலிமஹான் ரங்க பீடத்தில், இலங்கை பொதுஜன பெரமுன மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் பாரிய பேரணியொன்று இன்று (21.11.2025) இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், பேரணியில் கலந்துகொள்வதற்காக அங்கு சமூகமளித்த தலதா அத்துகோரலவுக்கு சிறிது நேரம் எந்தவொரு ஆசனமும் ஒதுக்கப்படாத நிலையே இருந்தது.
முன்வரிசையில் ஆசனம்
இதனையடுத்து, அவருக்கு முன்வரிசையில் ஆசனமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சற்றுமுன்னர் ஆரம்பமான நுகேகொடை பேரணியில் பெருந்திரளான மக்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 2 மணி நேரம் முன்
போராட்டத்திற்கு பிறகு தமிழுக்கு பிறந்த குழந்தை, ஆனால் எதிர்ப்பாரா திருப்பங்களுடன்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ Cineulagam
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam