வவுனியாவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இராணுவம்: இருவர் வைத்தியசாலையில்!
வவுனியா - கனகராஜன் குளப்பகுதியில் உள்ள கரப்பு குத்தி குளத்தினுள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முயன்ற இராணுவத்தினருக்கும், பொது அமைப்பினருக்கும் இடையே இடம்பெற்ற கைகலப்பில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (12.09.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கரப்புக்குத்தியில் அமைந்துள்ள குளத்தில் மீன்பிடிப்பதற்காக விலைக்கோரல் அடிப்படையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரப்புக்குத்தி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் வலைகளைப் போட்டு சட்டவிரோதமாக குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த நிலையில் குளத்தினை மீன்பிடிப்பதற்காக குத்தகைக்கு எடுத்தவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என இராணுவத்திற்கு தெரியப்படுத்தி இருந்தனர்.
எனினும் நேற்று இரவு 9.00 மணியளவில் மீளவும் இராணுவத்தினர் வாள்கள் கொண்டு மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்து அப்பகுதிக்கு சென்ற குளத்தினை குத்தகைக்கு எடுத்த பயனாளியும் அவரது நண்பரும் மீன்பிடிக்க வேண்டாம் என இராணுவத்தை மறித்த போது கையிலிருந்த வாள்களால் முதுகிலும் முள்ளந்தண்டின் கீழ்பகுதியிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் கரப்புக்குத்தியைச் சேர்ந்த சிறீதரன் சுஜீபன் (29) எனும் இளைஞன் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை இராணுவத்தை சேர்ந்த ஒருவரும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam