குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை: மொரட்டுவையில் கொடூரம்
மொரட்டுவையில் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுனாவ பிரதேசத்தில் வீடொன்றின் முன்பாக நேற்று(12.09.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
குறித்த பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டடுள்ளார்.
உயிரிழந்த நபர் வாக்குவாதத்தின் போதே வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மொரட்டுவை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
