50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி: மூவர் படுகாயம்
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை வி்ட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (13.09.2023) மதியம் 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் பொகவந்தலாவ, மோரா தோட்டபகுதியில் இருந்து, ஹட்டனுக்கு சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில் முச்சக்கரவண்டியானது ஐம்பது அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் முச்சக்கரவண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.
அதேவேளை சாரதிக்கு தலைப்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு மூன்று பேரும் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri