தையிட்டியில் புதிய யுக்தியை கையாளும் அநுர!
யாழ். தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸாரால் அளிக்கப்பட்ட இடையூறை தொடர்ந்து, அநுர அரசாங்கத்தின் மீது சந்தேகம் எழுவதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், யாழ். தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தின் போது அமைதியின்மை ஏற்பட்டது.
இதன்போது அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தாக்கப்பட்டதுடன் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அங்கிருந்து சென்றாலேயே கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
உண்மையில் இது தமிழ் மக்கள் மத்தியில் தற்போதைய அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்கள் போலவே செயற்படுகின்றது என பேசப்பட்டது.
இந்நிலையில், இன்றைய தினம், மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
கரூரிலும் எகிப்திலும் உள்ள தமிழ் பெயர்; இரும்பை கண்டுபிடித்த தமிழன் - அமர்நாத் ராமகிருஷ்ணன் News Lankasri
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan