பெரும் பரபரப்புக்கு மத்தியில் தையிட்டிக்கு விஜயம் செய்துள்ள நயினாதீவு விகாராதிபதி
தையிட்டி விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில் நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்றையதினம்(2) தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளனர்.
இவ்வாறு விஜயம் செய்த குழுவினர் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
தையிட்டிக்கு விஜயம்
குறித்த விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் நாளையதினமும்(3) ஒரு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்தவகையில் குறித்த குழுவானது இன்றையதினம் அங்கு விஜயம் செய்துள்ளமையானது பெரும் எதிர்பார்புகளை ஏற்படுத்தியுள்து.
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri